×

காற்று மாசு பிரச்னையில் விவசாயிகளை வில்லனாக்க வேண்டாம் : பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி, என்சிஆர் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், கடுமை பிரிவில் இருந்த காற்று மாசு ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு தற்போது சரிந்துள்ளது. டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுவுக்கு அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் காற்று மாசுவும் காரணம் என்பதால், அது தொடர்பாக டெல்லி, பஞ்சாப் , அரியானா , உத்தரபிரதேசம் மாநிலங்களுக் இடையே மோதல் நடந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்ப்பட்டுள்ளன. இவற்றின் மீது விசாரணை நேற்று நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்றும் விசாரிக்கப்பட்டது. அப்போது, நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘பயிர்க்கழிவு எரிப்பை தடுப்பது தொடர்பாக விவசாயிகள், விவசாய சங்க தலைவர்களுடன் தொடர்பாக 8,481 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அவர்களிடம் காவல் ஆய்வாளர்கள் மூலமாக வைக்கோல்களை எரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

இதை கவனத்தில் எடுத்து கொண்ட நீதிமன்றம், ‘இந்த வழக்கில் விவசாயிகள் விசாரிக்கப்படவில்லை என்பதற்காக, அவர்களை வில்லனாக்க வேண்டாம். அவர்கள் பயிர் கழிவுகளை எரிப்பதற்கு நியாயமான முக்கிய காரணங்கள் இருக்கக் கூடும். விவசாய பயிர்க்கழிவு எரிப்புகள் குறையவில்லை. ‘பயிர்க்கழிவு எரிப்பு தொடர்பாக 984 வழக்குகள் நில உரிமையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுசூழல் இழப்பீடு ரூ.2 கோடிக்கும் அதிகமாக விதிக்கப்பட்டு, ரூ. 18 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளது,’ என்று பஞ்சாப் அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பஞ்சாப் அரசு ஏன் பயிர்க்கழிவை உரமாக மாற்றும் செயல்முறையை 100 சதவீத இலவசமாக்கவில்லை. இத்திட்டத்தை நல்லமுறையில் விவசாயிகளுக்கு மானியம் கொடுத்து நிறைவேற்றி வரும் அரியானா அரசிடம் இருந்து பஞ்சாப் அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்,’ என்று தெரிவித்தது.

The post காற்று மாசு பிரச்னையில் விவசாயிகளை வில்லனாக்க வேண்டாம் : பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Punjab ,New Delhi ,Delhi, NCR ,EU ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...